"கள்ளதனமாக நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் போது வெடிவிபத்து! ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரபரப்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுக்கா வன்னிவேடு பஞ்சாயத்து சேர்ந்த அணைக்கட்டு ரோட்டில் உள்ள நரிக்குறவர் காலனியில் உள்ள நரிக்குறவர் தமிழன் விட்டில் கள்ளத்தனமாக காட்டுப்பன்றிகளுக்கு வைக்கப்படும் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் போது கவனக்குறைவால் வெடிவிபத்து ஏற்பட்டவுடன் ஏழு நபர்களையும் ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேல்சிகிச்சைக்காக மூன்று நபர்களை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும் போது வழியில் உழைப்பாளி என்பவர் உயிரிழந்தார்.
மேலும் தமிழன் மற்றும் எஜமான் தீவிர சிகிச்சையில் அளிக்கப்பட்டு வருகிறது. மற்றும் நான்கு நபர்கள் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 1)விஜய் 20 த/பெ சேகர் 2)உழைப்பாளி25 த/ப சேகர் 3) தமிழன்32 த/பெ துரை 4) எஜமான்22 த/பெ துரை 5)சின்னதம்பி27 த/பெ மணி 6)வேதவள்ளி25,க/பெ சின்னதம்பி 7) நந்தினி25 க/பெ எஜமான். சம்பவ இடத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் மயில்வாகனன் மற்றும் துணை கண்காணிப்பாளர் பூரணி வாலாஜா காவல் நிலைய ஆய்வாளர் பாலு வருவாய் துறை வாலாஜா வட்டடாசியர் பாக்கியநாதன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அதியமான் மற்றும் காவல்துறை சிறப்பு அதிகாரிகள் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் நரிக்குறவர் காலனியில் உள்ள நரிக்குறவர்களிடம் விசாரித்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது செய்தியாளர் : ஆர்.ஜே.சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை