ராணிப்பேட்டை மாவட் டத்தில் காவல்துறையினருக்கு புதிய செல்போன் செயலியை எஸ்பி மயில்வாகனன் தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட் டத்தில் குற்ற சம்பவங் களை ஆய்வு செய்யக் கூடிய காவல்துறையினர் தினசரி ஆய்வறிக்கையை சமர்ப்பிப்பதற்காக அந்தந்த பகுதியில் உள்ள கடைகளில் காவல்துறை சார்பில் ஒரு புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. இது போன்று 108 இடங்களில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களில் தினசரி காவல்துறையினர் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இதில் முறைகேடு நடப்பதாக கூறி காவல் துறையினருக்கான புதிய செல்போன் செய லியை எஸ்பி மயில்வாகனன் தொடங்கி வைத்துள்ளார். அந்தந்த கடைகளில் உள்ள புத்தகங்களில் பார் கோடு வைக்கப்பட்டிருக்கும். அதை ஸ்கேன் செய்து போலீசார் தங்களது அறிக்கையை சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
எமது செய்தியாளர் : ஆர்.ஜே.சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை