கோவில்பட்டியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு 6 வயது சிறுமி ரவீணா பத்து நிமிடத்தில் 30க்கு மேற்பட்ட யோகா ஆசனங்களை செய்து அசத்தினார்.
உலக யோகா தினத்தை முன்னிட்டு கரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கையாக கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து 6 வயது சிறுமி ரவீணா பத்து நிமிடத்தில் 30க்கு மேற்பட்ட யோகா ஆசனங்களை செய்து அசத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உலக யோகா தினம் மற்றும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 6 வயது சிறுமி ரவீணா பத்மாசனம், பருவதாசனம், ஏகபாத சிரசசனம்,கபோடசனம், பூர்ண கபோடசனம், முசடசனம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட யோகா ஆசனங்களை பத்து நிமிடங்களில் செய்து அசத்தினார்.
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் யோகா மூலம் தங்களது உடலை ஆரோக்கியமாக பேணி காக்கும் விதமாக ஆசனங்களை செய்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசு மருத்துவமனை இயற்கை மருத்துவர் திருமுருகன், சமூக ஆர்வலர்கள் ராஜகோபால், சைலஜா, ஆகியோர் கலந்து கொண்டு மாணவி ரவீனாவுக்கு பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் அசோக் ஜெயன், முருகேசன் விஸ்வகர்மா நகைத் தொழிலாளர் சங்க தலைவர், விஸ்வகர்மா நகைத் தொழிலாளர் சங்க செயலாளர் முருகானந்தம், மாரியப்பன், விஸ்வகர்மா நகைத் தொழிலாளர் சங்க பொருளாளர், பிரங்லிங் ஹேர்பல் தாஸ், சந்திரலீலா விஜயன், ரம்யா ராமராஜ், சாய்விஷ்வா, மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார் செய்திருந்தார்.
கருத்துகள் இல்லை