திருவாடானை அருகே ஊரடங்கு உத்தரவால் பசி பட்டினியோடு தங்கள் ஊருக்கு செல்ல முடியாமல் தவிக்கும் சர்க்கஸ் தொழிலாளர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை அருகே ஆண்டாவூரணி கிராமம் உள்ளது இங்கு சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பூர்வீகமாக கொண்ட சர்க்கஸ் தொழிலாளர்கள் 4 பெண்கள், 6,சிறுவர்கள் உட்பட 20 பேர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் நடக்கும் திருவிழாவின் போது கூடாரம் அமைத்து சர்க்கஸ் சாகசங்கள், செய்தும், ஒட்டகம், குதிரைகள், நாய்கள் ஆகியவற்றை வைத்து வித்தை காண்பித்து பிழைப்பு நடத்தி வந்தார்கள். ஊரடங்கு உத்தரவால் திருவிழாக்கள் நின்று போனது.. மேலும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் ஆண்டாவூரணி கிராமத்திலேயே முடங்கிக் கிடக்கின்றனர் தற்போது சாப்பிட வழியின்றியும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருவதோடு பசியும் பட்டினியுமாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
இவர்களுக்கு அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள், கவுன்சிலர்கள், தலைவர்கள் சிறு சிறு உதவியை செய்திருந்தாலும் தங்கள் பசியை முழுமையாக போக்க முடியவில்லை என்றும் தங்களது ஊருக்கு செல்ல முடியவில்லை என்றும் தாங்கள் வளர்க்கும் பிராணிகளுக்கு உணவு வழங்க முடியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து ஆறுதல் அடைந்து வருவதாக வேதனை தெரிவித்தனர். அரசு எங்காது பசியினை போக்க உரிய உதவி செய்திட வேண்டி கோரிக்கை வைத்தனர்
கருத்துகள் இல்லை