Header Ads

  • சற்று முன்

    அம்பத்தூரில் குவிந்த வடமாநில தொழிலார்கள் இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பானது


    அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்து 2000 த்திற்கும்  மேற்பட்ட வடமாநில கூலி தொழிலாளர்கள் ஆதார் அட்டைகளுடன் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பாக கனப்படுகிறது.

    தமிழகத்தில் இருக்கக்கூடிய வடமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலத்திற்கு அனுப்புவதற்கு தமிழக அரசு தற்போது கணக்கெடுக்கும் பணியை தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே இருக்கக்கூடிய வடமாநில தொழிலாளர்கள் பிபோராட்டம்  செய்து வருகின்றனர். இதனால் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன இந்த நிலையில் அவரவர் மாநிலத்திற்கு அனுப்புவதற்கு பணிகள் மும்முரமாக தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உளில் 2000 மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள்  தங்களது முழு விவரங்களை கொடுப்பதற்காக கூட்டமாக   கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது  இந்நிலையில் அம்பத்தூர்  மண்டலம் 7 அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் யாரும் முன்வராததால் அம்பத்தூர் தொழிற் பேட்டை காவல் ஆய்வாளர் விஜயராகவன் தலைமையில் கணக்கெடுக்கும் பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. கூட்டம் அதிக அளவில் கூடியதால் போலீசாரே முன்வந்து அவர்களது முழு விபரங்களை சேகரித்து வருகின்றனர்  மண்டல 7 அம்பத்தூர் பகுதியில் குர்ஆன் ஒட்டு தீவிரமாக பரவி வருகிறது ஆனால் சற்று கூட சமூக இடைவெளி கடைபிடிக்காமல் ஒரே இடத்தில் 2000 த்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் கூடியதால் பரபரப்பபாக காணப்படுகிறது. அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் உள்ள சுமார் 13 காவல் நிலையங்களில் 9000 வடமாநில கூலித் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாக அம்பத்தூர் காவல் துணை ஆணையர் ஈஸ்வரன் அவர்கள் தகவல் அளித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad