கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர் கே ஆர் சாரதா அரசு மேல்நிலைப் பள்ளியில் மளிகை பொருட்கள் வழங்கினர் .
கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர் கே ஆர் சாரதா அரசு மேல் நிலைப் பள்ளியில் கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவியர்களின்குடும்பத்திற்கு அப்பள்ளி ஆசிரியர்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள்வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
கொரோனா வைரஸ் காரணமாக உலகமே ஸ்தம்பித்து உள்ள நிலையில் ஏழை எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை கூட நடத்த முடியாத சூழ்நிலையில் உள்ளனர் ..
ஏழை எளியவர்களுக்கு தமிழக அரசு மற்றும் பல தன்னார்வலர் நிறுவனங்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர் கே ஆர் சாரதா அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளின் குடும்பத்திற்கு பள்ளி ஆசிரியர்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள் தலைமை ஆசிரியர் சீனி தலைமையில்நாலாட்டின்புத்தூர் காவல் ஆய்வாளர் சுகாதேவி அவர்களால் அரிசி மளிகை பொருட்கள் காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கினார் .
இதில் அப்பள்ளியில் பயிலும் 100க்கும் மேற்பட்ட ஏழை எளிய மாணவ மாணவிகளின் குடும்பத்தினர் ; மற்றும் பள்ளி தூய்மை பணியாளர்கள் அப்பகுதியில் உள்ள உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு நிவாரண பொருட்கள் சென்று சேர் ந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை