Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு - த.மா.கா கோரிக்கை - உடனடியாக நிறைவேற்றிய அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ




    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதியில் நடைபெற்ற அரசு அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டத்திற்கு வந்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர். செ.ராஜீவை சந்தித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் கே.பி.ராஜகோபால் மற்றும் மூர்த்தி ஆகியோர் கோரிக்கை மனு ஒன்றினை அளித்தனர். அந்த மனுவில் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருப்பவர்களுக்கும், பரிசோதனைக்காக வருபவர்களுக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள ஊட்டச்சத்து உணவு விபர பட்டியல் படி தினமும் காலையில் டீ, ஜூஸ்,பொங்கல், இஞ்சி சட்னி, ஆரஞ்சு பழம், அவித்த முட்டையும், மதியம் தக்காளி சாதம், காய்கறி பொறியல், தயிர் சாதமும், மாலையில் டீ, வேர்க்கடலை, கொண்டைக்கடைலையும், இரவு சப்பாத்தி, வெஜ்குருமா, பனங்கற்கண்டு பால் வழங்க வேண்டும், அல்லது காலையில் இட்லி, வடை, சாம்பார் - சட்டினி, ஆரஞ்சு பழம், அவித்த முட்டை, டீ, ஜீஸ், மஞ்சள் தூள் மிளகு தூள் பாலும், மதியம் அரிசி சாதம், கதம்ப சாம்பார், வெள்ளைப்பூண்டு ரசம், கூட்டுப்பொறியல், பழம் வழங்க வேண்டும், மாலையில் டீ,வேர்கடலை, கொண்டைக்கடலையும், இரவில் கோதுமை தோசை , பனங்கற்கண்டு பால் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேற்கண்ட் உணவு விபர பட்டியலில் குறிப்பிட்டுள்ளவற்றை தயார் செய்வதற்கு சமையல் பணியாளர்கள் மற்றும் அதற்கான நிதி ஆகியவற்றை அரசு மருத்துவமனைக்கு வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    மனுவினை பெற்றுக்கொண்ட அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ, மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி, மருத்துவமனை நிர்வாகம் மற்றும் வருவாய்துறையினருடன் ஆலோசனை நடத்தி, தமிழக அரசு அறிவித்துள்ள ஊட்டச்சத்து உணவு விபர பட்டியல் படி உணவு வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கோரிக்கை மனு கொடுத்தவுடன் நடவடிக்கை மேற்க்கொண்ட அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீவிற்கும்,  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் நன்றி தெரிவித்து கொண்டனர். 

     


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad