திருப்பத்தூரில் 3 நகர பகுதி மக்களுக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மோகன் 10 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.
திருப்பத்தூரில் 3 நகர பகுதி மக்களுக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மோகன் 10 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.
கொரானா கோரப்பிடியில் வாழ்வாதாரங்களை இழந்து வரும் குடும்பங்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் பல நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர் இந்த நிலையில் திருப்பத்தூர் நகரம் 36 வார்டு பிரதிநிதி பெருமாள் வாழ்வாதாரங்களை இழந்து வசித்து வரும் பாரதிதாசன் நகர், வள்ளுவர் நகர், சாமியார் கொட்டாய், ஆகிய மூன்று நகர பகுதி மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை ஏற்பாடு செய்திருந்தார்.
இதனை வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் முன்னிலையில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மோகன் அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் மேற்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவு அமைப்பாளர் சவுத்அகமது,மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கார்த்திக் மற்றும் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை