திருவாடானையில் துப்புரவு பணியாளர்களுக்கு ஒன்றிய திமுக வினர் நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, திருவாடானையில் கொரனோ வைரஸ் தொற்று பரவலை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் பரவலை தடுக்க தன்னலம் கருதாது துப்புரவு பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு . திருவாடானை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து ஒன்றிய திமுக அணியின் சார்பில் மாவட்ட செலாளர் முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையில், துப்புரவு பணி செய்யும் ஏழை மக்களுக்கு 10 கிலோ அரிசி பை சமூக இடைவெளி விட்டு நின்று முகக் கவசங்கள் அணிந்து பாதுகாப்பான முறையில் வழங்கினார்கள்.
இந்த நிகழ்வில் ஒன்றிய தலைவர் முகம்மது முக்தார், ஒன்றிய செயலாளர்கள் சரவணன், ரவி, மாவட்ட இளைஞரணி அணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன், மற்றும் கவுன்சிலர்கள், நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டார்கள்' தி.மு.க. சார்பில் மேலும் 100 ஏழை எளிய மக்களுக்கும் . ஆட்டோ கார், ஓட்டுhர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு வழங்கிய அரிசியை அனைவரும் பெற்று பயனடைந்தனர்.
கருத்துகள் இல்லை