ஆவடி அடுத்த திருநின்றவூர் பேரூராட்சி அலுவலகத்தில் அதிமுக சார்பில் 300 தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரானா வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசு விதித்துள்ள ஊரடங்கு காரணத்தால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமலும் வேலையின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆவடி அடுத்த திருநின்றவூர் சுற்றுப் பகுதியை சார்ந்த தூய்மை பணியாளர்களுக்குதினக்கூலி தொழிலாளர்களும் 300 க்கும் மேற்பட்டோருக்கு அதிமுக சார்பாக தன்னார்வலர் கிஷோர் ஏற்பாட்டின் திருநின்றவூர் பேரூராட்சியில் அலுவலக வளாகத்தில் வட்டாட்சியர் சங்கிலி ரதி மற்றும் திருநின்றவூர் பேரூராட்சி நகர அதிமுக கழக செயலாளர் தர்மலிங்கம் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த காவலர்களுக்கும் அரிசி,பருப்பு,சமையல் எண்ணெய்,உளுந்து,புளி பூண்டு,மிளகு சீரகம் குழந்தைகளுக்கு பிஸ்கட் பால் பாக்கெட் மற்றும் காய்கறிகளை வழங்கினார் இந்த நிகழ்வில் திருநின்றவூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி மாலா உடன் இருந்தனர் இந்நிகழ்வில் தூய்மைப் பணியாளர்கள் சமூக விலகலை கடைபிடித்து வாங்கிச் சென்றனர்
கருத்துகள் இல்லை