• சற்று முன்

    வந்தவாசி அடுத்த வல்லம் கிரமத்தில் எளிமையான முறையில் திருமணமும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கிய மணமக்கள்


    வந்தவாசி அடுத்த வல்லம் கிராமத்தில் கொரோனோ அச்சம் காரணமாக எளிய முறை திருமணம்-தூய்மைக்காவலர்களுக்கு உணவு வழங்கிய மணமக்கள்.

     திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வல்லம் கிராமம் பாஞ்சாலி அம்மன் கோவில் தெருவை க சேர்ந்த விஷ்ணு என்பவருக்கும் உத்திரமேரூர் அடுத்த சேர்ந்த தட்டாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ரதிமீனா என்பவருக்கும் வந்தவாசியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. கொரோனோ அச்சம் காரணமாக மணமகனின் சொந்த ஊரான  வல்லத்தில் உள்ள மணமகன் வீட்டில் இன்று எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.20 க்கும்குறைவானவரே கலந்து கொண்ட இந்த திருமணத்தில் மணமகனும், மணமகளும் முகக்கவசம் அணிந்திருந்தனர். திருமண விருந்தில் உணவருந்திய வர்கள் இடைவெளிவிட்டு அமர்ந்திருந்தனர்.  திருமணம் முடிந்த நிலையில் வல்லத்தில் தூய்மைப்பணியினில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு மணமக்கள் காலை உணவை அவர்கள் இருந்த இடத்திற்கே சென்று வழங்கினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad