பெரம்பூர் காய் கனி அங்காடிக்கு மாநகர ஆட்சியால் சீல் வைக்கப்பட்டது
பெரம்பூர் பட்டேல் சாலையில் பல ஆண்டுகளாக பெரம்பூர் காய் கனி அங்காடி இயங்கி வந்தது. இங்கு பெரம்பூர் சுற்று வட்டார பகுதியிலுள்ள சிறு காய்கறி வியாபாரிகள் வாங்கி பயன்னடைந்தனர். மேலும் சில்லறை விற்பனையும் வெகு ஜோராக நடைபெற்று வந்தது.. அது தற்போது உலகையே அச்சுறுத்தும் கொரோனா தொற்று நோய் காரணமாக காரணமாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டது.. ஆனால் வாடிக்கையாளர்கள் கூட்டம் கட்டுக்கு அடங்காமல் போனதால் சென்னை மாநகராட்சி இந்த காய்கறி அங்காடிக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் சீல் வைக்கப்பட்டது.
அதே அங்காடி தற்போது 500 மீட்டர் தொலைவில் நேற்று முதல் இயங்க தொடங்கியது. இங்கு கூட்டம் நெரிசலை கட்டுப்படுத்த போதிய இடைவெளி விட்டு வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை