Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் தடையை மீறி விற்பனை செய்த நூற்றுக்கு மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைப்பு !


    கோவில்பட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகளில் தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் திடீர் ஆய்வு விதிமுறைகளை மீறி இயங்கிய கடைக்கு சீல் வைப்பு.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தினசரி மார்க்கெட், பண்ணைத் தோட்டம் தெரு, பாரதிதாசன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மொத்த விற்பனைக் கடைகளில்  பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டனுக்கு கிடைத்த தகவலை அடுத்து இன்று மதியம் தாசில்தார் மணிகண்டன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் குழுவினர் கோவில்பட்டி நகர பிரதான வீதிகளில் மொத்த விற்பனைக் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர் அப்போது அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா எனவும் பொருள்களை வாங்கிச் செல்லும் பொதுமக்களிடம் விலை நிலவரம் குறித்தும் விபரம் கேட்டறிந்தார். 

    ஆய்வின் போது  ராமசாமி தியேட்டர் அருகே மார்க்கெட் வளாகத்தில் சிவராம பாலன் என்பவருக்குச் சொந்தமான ஸ்நாக்ஸ் மற்றும் நொறுக்குத் தீனி வகைகள் விற்பனை செய்யும் ஒரு கடையில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்  முருகேசன் சுகாதார ஆய்வாளர் காஜா ஆகியோர் முன்னிலையில் அந்த கடையை பூட்டி  பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. தாசில்தாரின் திடீர் ஆய்வினால் கூடுதல் விலைக்கு பொருட்களை விற்ற ஒரு சிலர் கடைகளை மூடி விட்டு தலைமறைவாகி விட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad