• சற்று முன்

    விமர்ச்சனம் செய்யும் நேரமில்லை - ஆலோசனை வழங்கலாம் கமலஹாசனுக்கு பதிலடி கடம்பூர் ராஜு .


    கரோனா பரவுதலை தடுக்க கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஒத்துழைத்து இந்த பேராபத்தில் இருந்து மனிதர்களை காக்க வேண்டும். இது விமர்சனம் செய்யும் நேரம் கிடையாது. நல்ல ஆலோசனைகளை வழங்கலாம் கமலஹாசனுக்கு - கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பதில்

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட 20 படுக்கைகள் கொண்ட பிரிவை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டார். 

    பின்னர் வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் தற்காலிக தினசரி சந்தையில் கிருமிநாசினி சுரங்க பாதையை திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு அமைச்சரிடம் கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் அதன் தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம் ரூ.4 லட்சம் வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 
    மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நகரப் பகுதிகள் மட்டுமின்றி பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளிலும் கிருமி நாசினிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. கரோனா வைரஸால் மனித இனமே பாதிக்கப்படக் கூடிய சூழல் நிலவி வருகிறது. இதனை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதில் சட்டமன்ற, மக்களவை உறுப்பினர்களின் நிதியை அவர்களது தொகுதிக்கு உட்பட்ட கரோனா வைரஸ் பாதிப்புக்கு பயன்படுத்த வேண்டும் என்றுதான் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் யாருடைய உரிமையும் பாதிக்கப்படவில்லை. 

    தானாக முன்வந்து நாம் செய்யக்கூடிய காரியம் தான். சட்டமன்ற உறுப்பினர் வளர்ச்சி நிதியை கூட கரோனா தொற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நான் கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் ரூ.1 கோடியையும் இந்த தொகுதிக்கு தான் நான் பயன்படுத்த வேண்டும்.  அவசரகால நிதியாக கரோனா எதிர்ப்புக்கு அதனைப் பயன்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை மத்திய மாநில அரசுகள் எடுத்துள்ளன

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad