கொரோனா தடுப்பு கிருமி நாசினி பாதை ரூபாய் 75,000 மதிப்பீட்டில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி துவக்கி வைத்தார்.
மாவட்டத்திலேயே முதல் முறையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க கொரோனா தடுப்பு கிருமி நாசினி பாதை ரூபாய் 75,000 மதிப்பீட்டில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவர்கள் பணியை முடித்துவிட்டு ஆயுதப்படை வளாகத்திற்கு உள்ளே நுழையும் போது கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருப்பதற்காக கிருமி நாசினி பாதை அமைக்கப்பட்டுள்ளது, அனைவரும் கண்டிப்பாக பாதையில் உள்ளே சென்று வரவேண்டும் என்பதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த காவல் கண்காணிப்பாளர் கூறுகையில் மாவட்டத்தில் 144 தடை உத்தரவின் போது தேவையின்றி ஊர் சுற்றித் திரிந்த 6867 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தற்போது திருப்பி தரப்படமாட்டாது என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
கிரிமி நாசினி பாதை ஒரு மணி நேரத்திற்கு 11 லிட்டர் மட்டுமே இது எடுத்துக் கொள்ளும், மேலும் அதனுடைய மதிப்பு 75 ஆயிரம் ரூபாய் என தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை