கோவில்பட்டியில் வறுமையின் கோரப்பிடியில் சிக்கிய குடும்பத்துக்கு உணவு பொருட்கள் வழங்கி உதவிக்கரம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகர் 1வது தெருவில் மாற்றுத்திறனாளி பெண் சந்தனமாரி என்பவர் தனது 3 சின்னஞ்சிறு குழந்தைகளுடன் எவ்வித வருமானமும் இல்லாமல் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த கருணைக்கடல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிவராமலிங்கம்,அமைப்பின் ஆலோசகர் சங்கரஈஸ்வரமூர்த்தி, அமைப்பின் நிர்வாகிகள் ராஜா,ரவி. இதற்கு உறுதுணையாய் இருந்து உதவிய கிராம நிர்வாக அலுவலர் சூடாமணி கிராம நிர்வாக உதவியாளர் ராமமூர்த்தி ஆகியோர் நேரில் சென்று அந்த குடும்பத்தினரை சந்தித்து அரிசி மற்றும் காய்கறிகள் மளிகை பொருட்கள் வாங்கி கொடுத்து உதவி செய்தனர். மேலும் அரசின் உதவித்தொகை மற்றும் நலத் திட்டம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை