ஊரடங்கு கால நிவாரண பொருட்கள் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் செ .ராஜு வழங்கினார்.
கோவில்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் டூரிஸ்ட் கார் வேன் ஓட்டுனர்கள் மற்றும் இளையரசனேந்தலில் தீப்பெட்டி தொழிலாளர்கள், கோவில்பட்டி வட்டார பந்தல் தொழிலாளர்கள் நலச் சங்க உறுப்பினர்கள் உட்பட 504 நபர்களுக்கு கரோனா ஊரடங்கு கால நிவாரண உதவியாக அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று வழங்கினார். இந்நிகழ்வின் போது விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் மோகன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் அதிமுக நகர ஒன்றிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை