Header Ads

  • சற்று முன்

    62 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரத்து 538 ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதியாக வந்துள்ளதாக டுவிட்டரில் முதலவர் அறிவிப்பு


    கொரோனா பிரச்சினையை எதிர்கொள்ள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை எவ்வளவு பணம் வந்துள்ளது என்பது குறித்த விவரத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து, அவர் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நோய் தொற்றினை எதிர்கொண்டு சமாளிப்பதற்கான பணிகளை கருத்தில் கொண்டும், ஏழை, எளிய மக்கள் எதிர்கொண்டுள்ள இந்த பெரிய இன்னலில் இருந்த அவர்களை விடுவிக்கவும், தீவிரமான நோய் தடுப்பு நடவடிக்கைக்கும், தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு மனமுவந்து நன்கொடை அளிக்க விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து ஏப்ரல் இரண்டாம் தேதி வரையிலான நிலவரப்படி மொத்தம் 62 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரத்து 538 ரூபாய் வரப்பட்டுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக, மூன்றாம் தேதி முதல் ஆறாம் தேதி வரையிலான காலகட்டங்களில் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் மனமுவந்து நிதி உதவி வழங்கியவர்களின் விவரங்களை நான் இதில் இணைத்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்து சில நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.

    பிரைட் ஸ்டார் இன்வெஸ்ட்மெட்ஸ் நிறுவனம், கவின்கேர் நிறுவனம், டைட்டன் நிறுவனம், லூகாஸ் டிவிஎஸ் நிறுவனம் உள்ளிட்டவை இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மேலும், வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை ரூ.79 கோடியே 74 லட்சத்து 61 ஆயிரத்து 424 ரூபாய் ஆகும். நிவாரணம் அளித்த நிறுவனங்களுக்கும், பொது மக்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் மனமார்ந்த நன்றி! இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad