Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் கரோனா தொற்று நோய் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் - மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு


    கரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடெங்கும் காட்டுத்தீயாக பரவி பெரும் அச்சுறுத்தலை விதைத்துள்ளது. தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பின் தாக்கம் நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி போலீஸ் சப் டிவிஷனில் மூன்று நபர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    இதனையடுத்து பொதுமக்களிடையே கரோனா வைரஸ் பரவும் விதம் குறித்தும், நோய் பாதிப்பிலிருந்து மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும், தற்போதைய சூழலில் ஒவ்வொருவரும் தனிமைப்படுத்தி இருப்பதே நோய் பரவலை தடுப்பதற்கான நிரந்தர தீர்வு என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மேற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வீதிவீதியாக போலீஸ் வாகனத்தில் சென்று பொதுமக்களிடையே மைக் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்

    தொடர்ந்து பொதுமக்களுக்கு முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி திரவங்களை வழங்கி வருகிறார். வறுமையில் வாடும் குடும்பங்களுக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கும் உணவுகள் மற்றும்  மளிகை பொருட்களை தனது சொந்த நிதி மூலமாகவும் தன்னார்வலர்கள் மூலமாகவும் செய்து வருகிறார்.போலீஸ் இன்ஸ்பெக்டரின் விழிப்புணர்வு பிரச்சார செயலுக்கும் மனிதநேயமிக்க உதவிகளுக்கும் பொது மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad