• சற்று முன்

    ஊரடங்கை மீறி ஊர் சுற்றும் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கு கொடுத்த கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெபராஜ் அதிரடி


    ஊரடங்கை மீறி ஊர் சுற்றும் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கு மஞ்சள்  பெயிண்ட் அடித்து அடையாளம் கொடுத்த கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெபராஜ் அதிரடி

    கரோனா வைரஸ் பாதிப்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வரை 24 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சிவப்பு அடையாள குறியீடுக்குள் சிக்கியுள்ளது. இதையடுத்து மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் இணைந்து பல்வேறு புதிய யுத்திகளை செயல்படுத்த தொடங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஊரடங்கை மீறி ஊர் சுற்றும் நபர்களை கட்டுப்படுத்தும் விதமாக அவர்களது கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் மஞ்சள் பெயின்ட் அடித்து அடையாளப் படுத்தும் பணியில் கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெபராஜ் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் அதிரடியாக  நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்

    அடுத்து வரும் நாட்களில் வெவ்வேறு வண்ண பெயிண்ட் களால் வாகனங்களில் கோடு வரையப்படுகிறது. இன்று வரையப்பட்ட மஞ்சள் கோடு உள்ள வாகனங்கள் இனி வரும் ஏழு நாட்கள் வெளியே வரக்கூடாது. அதனை மீறி அவர்கள் வந்தால் சரியான காரணங்கள் அதாவது மருத்துவம் உள்ளிட்ட அவசியத் தேவைகளுக்கு மட்டுமே அவர்கள் வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள். இதனை மீறி மஞ்சள் பெயிண்ட் கோடு வரைந்து வாகனங்கள் வெளியே வந்தால் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்..

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad