வெற்று உரை வேதனையை தீர்க்காது - ஆக்கபூர்வமான நிவாரண உதவிகள் வழங்குக .
கடந்த சில நாட்களாக முதலமைச்சர் ஏப்ரல் 30ஆம் தேதி நீடிக்கும் என்று அறிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மே 3ஆம் தேதி வரை என அறிவித்ததின் மூலமாக உலக முதலாளி வர்க்கத்தின் உரிமை தினமும் முடக்கப்பட்டுள்ளது.சமூக இடை வெளி பின்பற்றுதல் தனிமையில் இருத்தல் தவிர இந்த தொற்று நோயை தடுக்க வேறு வழியில்லை என்று பிரதமர் திரும்ப திரும்ப வலியுறுத்துகிறார். மேலும் நாட்டு மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டடுமென வலியுறுத்துகின்றனர்.
நாட்டு மக்களின் ஒவ்வொரு உயிரும் முக்கியமானது என ஆதங்கப்படும் பிரமர் மக்கள் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய எந்த ஏற்படும் செய்யவில்லை . நாட்டில் உழைக்கும் மக்களில் 94 சதவீதம் தொழிலாளர்கள் அம்மைப்பு சாராத் தொழிலாளர்கள் எண்ணிக்கை கணிசமானது. இவர்கள் சட்ட ரீதியாகவோ சமூக ரீதியாகவோ எந்த பாதுகாப்பும் இல்லாதவர்கள் அன்றாடம் கிடைக்கும் அரைகுறை வேலைகளில் கிடைத்த வறுவையைக் கொண்டு பட்டினி வாழ்க்கை நடத்தி வருபவர்கள். அன்றாடம் கூலியை நம்பி வாழும் தொழிலாளி பட்டினி வாழ்பவர்கள் இவர்களது உணவுக்கான ஏற்பாடுகளுக்கு பிரதமர் முன்னுரிமை அளிக்க வேண்டும். குடும்பத்தார்க்கு பிரதமர் தலா 10 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும். மே ஜூன் மாதங்களுக்கு சக்கரை, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும். இதற்கான முறையில் நாட்டின் மொத்த வருமானத்தில் 10 சதவீதம் வரை ஒதிக்கீடு செய்து சிறப்பு நிவாரணத் தொகுப்பு திட்டம் அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தப்படுள்ளது.
கொரோனா தொற்று நோய் தடுப்பு காலா நடவடிக்கைளை குறுகி அரசியல் ஆதாயம் தேட பயன்படுத்தும் பிரதமரின் கிட்ட பார்வையை அவரது உரை வெளிப்படுத்தியுள்ளது. உயிர் வாழ துடிக்கும் மக்கள் துயரங்ககளை பிரதிபலிக்க பிரதமரின் வெற்று உரை வேதனைகளை தீர்க்க உதவாது. முடக்க காலத்தில் மக்கள் உணவுத் தேவைகள், மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் ஆக்கபூர்வமான நிவாரணத் தொகுப்பு திட்ட அறிவிப்பாக பிரதமரின் அடுத்த உரை அமைய வேண்டுமென இந்திய கம்பயூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற் குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
கருத்துகள் இல்லை