திருவண்ணாமலை தேரடி தெருவில் நடுரோட்டில் கயிற்று கட்டில் போட்டு படுத்த பெண்மணியால் அப்பகுதி பெரும் பரபரப்புக்குள்ளானது
சாலையில் படுத்து உறங்கும் பெண் திருவண்ணாமலையில் பரபரப்பு திருவண்ணாமலை ஏப்.6- திருவண்ணாமலை தேரடி தெருவில் பிரதான சாலையில் பின் ஒருவர் கட்டில் போட்டு படுத்து இருக்கும் காட்சியை அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள மக்களை குரோனோ வைரஸ் பாதிப்பு உலக மக்களிடையே அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்கள் சிலர் சமூக பரவலுக்கு வித்திடுகின்றனர். அதைத்தொடர்ந்து காவல்துறையினர் வெளியில் சுற்றித் திரிபவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கின்றனர். திருவண்ணாமலை நகரில் காய்கறிகள் மளிகை பொருட்கள் உணவுப் பொருட்கள் மற்றும் கடைகள் மட்டும் இயங்க அனுமதி அளித்துள்ளது. காலை 6 மணி முதல் ஒரு மணி வரை காய்கறி பொருட்களையும் பெட்ரோலிய பொருட்களையும் விற்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திங்கள் காலை தேரடி தெருவில் உள்ள பிரதான சாலையில் கட்டில் ஒன்றை போட்டு அதன் மீது பெண் ஒருவர் படுத்திருக்கும் காட்சி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை படுத்தியுள்ளது. பெண் ஒருவர் சாலையில் படுத்து இருக்கும் இந்த சம்பவம் குறித்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை