Header Ads

  • சற்று முன்

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் கே.கே.ஆர்.அய்யாத்துரை கயத்தாறு பகுதி சவர, சலவை தொழிலாளர்களுக்கு நிவாரண உதவியைவழங்கினார்


    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வருமானமின்றி அடிப்படை தேவைகளுக்கே போராடி வரும் நிலையில் அவர்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவிகரம் நீட்டி வருகின்றனர்.அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர்  கே.கே.ஆர்.அய்யாத்துரை சார்பில் கடந்த ஒருவார காலமாக நிவாரண பொருட்கள் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக கயத்தாறு சலவை மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த சுமார் 200 தொழிலாளர்கள் வருமையில் வாடுவதை அறிந்து அவர்களுக்கு அரிசி, காய்கறிகள் அடங்கிய நிவாரண பொருட்களை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர்  கே.கே.ஆர்.அய்யாத்துரை நேற்று வழங்கினார். அவருடன் மாவட்ட பிரதிநிதியும் கயத்தாறு பால் உற்பத்தியாளர் கூட்டுரவு சங்க தலைவருமான கோதண்டராமன், வண்டானம் கூட்டுரவு சங்க தலைவர் பொன்னுசாமி பாண்டியன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் செல்வகுமார், மாவட்ட பிரதிநிதிகள் கொம்பையா, எட்ராஜ், கயத்தாறு பேரூராட்சி 13வது வார்டு முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகவேல், வார்டு செயலாளர்கள் மாடசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad