காய் வாங்க கூட நீங்க வெளியே வராதீங்க.-. நாங்கள் வரோம்.அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் அறிவிப்பு !!
திருச்சி: திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான 11 வகையான காய்கறிகள், 150 ரூபாய் மலிவு விலைக்கு தமிழ்நாடு அரசால் விற்பனை செய்யப்படுகிறது. திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு, ரூ.150 விலையில் 11 காய்கனிகளுடன் கூடிய தொகுப்புப் பை வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எஸ். வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். ஊரடங்கு அமல் காரணமாக, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க மாநகரிலும் , மாவட்டப் பகுதிகளிலும் தற்காலிக காய்கனி சந்தைகள் தொடங்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், கூட்டுறவுத் துறை மூலமாக நகரும் பண்ணைப் பசுமைக் கடைகள் மூலமும் விற்பனை நடைபெறுகிறது.
தொகுப்பு பை இந்நிலையில் பொதுமக்கள் காய்கனிகளை வாங்குவதற்காக அதிகளவில் வெளியே வருவதை தடுக்கவும், அவரவா் இருப்பிடப் பகுதிகளுக்குச் சென்று குறைந்த விலையில் வழங்கும் வகையில் காய்கனிகள் தொகுப்புப் பை வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ரூ 150 மதிப்பிலான தொகுப்பு பைகள் திருச்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், காய்கனிகள் கொண்டு செல்லும் வாகனங்களை அமைச்சா்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளா்மதி ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனா். மேலும், பொதுமக்களுக்கு ரூ.150 மதிப்பில் 11 வகை காய்கனிகள் அடங்கிய தொகுப்புப் பைகளையும் அமைச்சா்கள் வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் வழங்கினார்கள்.
கருத்துகள் இல்லை