திருவாடானை அருகே கிராம சாலைகளை அடைத்த கிராம மக்கள்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா . திருவாடானை அருகே திருச்சி - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிவு சாலைகள் வழியாக ஆதியாகுடி மற்றும் ஆட்டூர் கிராமங்கள் உள்ளது. இந்த கிராம மக்கள் கொரனோ வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தும் வகையிலும், மாநில அரசின் 144 தடை உத்தரவையடுத்து தாங்களாகவே முன்வந்து தங்களது கிராமத்திற்குள் அன்னியர்கள் யாரும் வர கூடாதென்றும், தாங்களும் வெளியில் செல்லக்கூடாதென்று முடிவு செய்து சமூக பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில் சாலைகளை முட்களை போட்டும் பெரிய தூம்புகளை போட்டு அடைத்தனர். மேலும் கொரனோ வைரஸ் பரவுவதை தடுக்கும் வாருட்டு அண்ணியர் யாரும் வரக்கூடாது என்று எச்சரிக்கை பலகையும் வைத்துள்ளனர். இது கிராம மக்களிடையே வரவேற்பை பெற்றது.
கருத்துகள் இல்லை