Header Ads

  • சற்று முன்

    தீவிரப்படுத்தும் லாக் டவுன் கட்டுப்பாடுகள்


    கொரோனா காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மே 3ம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். மே 3ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக அரசு முடிவெடுக்க உள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 752ஆக அதிகரித்துள்ளது.

    கட்டுப்பாடுகள் அதிகரிப்பு 
    இந்த நிலையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மட்டும் திடீரென்று கொரோனா லாக் டவுன் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக பெரு நகரங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று சென்னையில் அண்ணாசாலை மொத்தமாக மூடப்பட்டது. இதையடுத்து தற்போது சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய முக்கியமான மூன்று மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது;

    கடைகள் செயல்படாது 
    இந்த நாட்களில் கடைகள் எதுவும் செயல்பாடது. மக்கள் வெளியே வர கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். முக்கியமாக சேலம் முழுக்க அனைத்து கடைகளும் இந்த நாட்களில் மொத்தமாக மூடப்படும். யாரும் வெளியே பொருட்கள் வாங்க வர முடியாது. சென்னையில் பொருட்களை வீட்டில் டெலிவரி செய்ய மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாறாக மக்கள் அடிப்படை தேவைகளுக்கு கூட இந்த நாட்களில் வெளியே வர முடியாது.
    என்ன காரணம் 
    பெரு நகரங்களில் இப்படி திடீர் என்று கட்டுப்பாடுகள் அதிகரிக்க காரணங்கள் உள்ளது . முதல் விஷயம் சென்னை, சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை ஆகியவை தமிழகத்தில் மிகவும் முக்கியமான மாவட்டங்களாகும். தமிழகத்தின் பொருளாதாரத்தில் இந்த மாவட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.இந்த மாவட்டங்களை நீண்ட நாட்களுக்கு மூடி வைக்க முடியாது. இந்த மாவட்டங்களில் மே 3ம் தேதிக்கு மேலும் ஊரடங்கை பிறப்பிக்க முடியாது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad