வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையம் பூட்டு
கோவை: 6 போலீசாருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், கோவை நகரிலுள்ள போத்தனூர் காவல் நிலையம், 2 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதேபோல இன்ஸ்பெக்டருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால், வாணியம்பாடி தாலுகா காவல் நிலையமும் மூடப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடுப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் மருத்துவ பணியாளர்கள், போலீஸாருக்கு தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர தெற்கு உதவி கமிஷனர் உள்ளிட்ட போத்தனூர், குனியமுத்தூர், ராமநாதபுரம், போத்தனூர் இருப்புப்பாதை போலீஸார் 75 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 6 பேருக்கு கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனிமை கொரானா தொற்று மேலும்பரவாமல் இருக்க அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைபடுத்தும் பணியில் சுகாதார அலுவலர்கள் ஈடுபட்டுவருகிறார்கள். மேலும் கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின் பேரில், கோவை போத்தனூர் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும் வேறு இடத்தில் இருந்து போத்தனூர் காவல் நிலையம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.

கிருமி நாசினி
அடுத்த 2 நாட்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட பணிகள் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இதன்பிறகு, மீண்டும் காவல் நிலையம் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பால், காவல் நிலையம் மூடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் இன்ஸ்பெக்டர்
வாணியம்பாடியில் கடந்த 21ம் தேதி சுகாதாரத்துறை சார்பில் காவல்துறையைச் சேர்ந்த 23 பேர் மற்றும் வருவாய்த்துறையினர் உள்பட 54 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் நேற்று வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
போலீஸ் நிலையம் பூட்டு
இதனால் அவர் பணிபுரிந்து வந்த வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையம் மற்றும் அவர் வசித்த குடியிருப்பு பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, போலீஸ் நிலையத்துக்கு பூட்டு போடப்பட்டது.
கருத்துகள் இல்லை