• சற்று முன்

    மனித நேயம் கொண்ட தூத்துக்குடி ஆயுதப்படை தலைமைக் காவலரின் செயல்


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு பகுதியில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பங்கேற்ற அரசு விழாவில் பங்கேற்க வந்த மூதாட்டி ஒருவர் முகக்கவசம் இல்லாமல் வருவதை பார்த்த அமைச்சரின் பாதுகாவலரும் தலைமை காவலருமான பாலகுமார், தன்னிடம் இருந்த புதிய முககவசத்தை வழங்கினார். அதை வாங்கிய மூதாட்டி அதை முகத்தில் அணிவதற்கு தெரியாமல்  கடந்து சென்றுள்ளார். இதனை கவனித்த தலைமை காவலர் பாலகுமாரன் அந்த மூதாட்டிக்கு முக கவசத்தை அணிவித்து பாதுகாப்பாக அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க அறிவுறுத்தி அனுப்பி வைத்தார். முக கவசத்தை கொடுப்பதோடு நம்முடைய பணி முடிந்துவிட்டது என்று பலரும் செயல்பட்டு வரும் நிலையில் அதை அணிவிக்க செய்து பாதுகாப்புடன் அரசு விழாவில் பங்கேற்க அனுப்பி வைத்த நிகழ்வை அனைவரும் பாராட்டினர். இந்த வீடியோவும் போட்டோவும் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

    எல்லா உயிரும் விலை மதிப்பற்றது தான் முக்கியமானது தான். திக்கற்றவர்களுக்கு தெய்வம் தான் துணை அந்த தெய்வம் மனித வடிவத்தில்தான் இயங்கும் என்பதற்கு இது போன்ற மனிதர்கள் உதாரணம்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad