தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் காவல்துறை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சத்து மாத்திரை வழங்கினார்
தற்போது உள்ள நிதி நிலையைப் பொறுத்து அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்வது குறித்து தமிழக முதல்வர் தான் முடிவு எடுப்பார் என் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் காவல்துறை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சத்து மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ, காவல்துறை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சத்து மாத்திரைகள், கபசுரக் குடிநீர் வழங்கினார்.தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர், சலவைத் தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் ஆகியோருக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
கருத்துகள் இல்லை