Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி மண்ணுக்கு மீண்டும் ஒரு புகழ் மகுடம்- கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு - தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி .


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரத்துக்கு பல பெருமைகள் உண்டு. சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் முதல் பல துறைகளிலும் முத்திரை பதித்த மாமனிதர்கள் மானாவாரி இயற்கை விவசாயத்தில் சாதனை நிகழ்த்தியவர்கள் என பல பல பெருமைகள் உண்டு. அந்த வரிசையில் புகழுக்கு புகழ் சேர்க்கும் விதமாக கோவில்பட்டியின் பாரம்பரிய அடையாளமான கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு இன்று கிடைத்திருப்பது இனிப்புக்குரிய ஒரு நற்செய்தி மட்டுமல்ல. காலமெல்லாம் இனிக்க இனிக்க அனைவரது மனங்களிலும் தித்திக்கும் செய்தியாகும்.

    நூற்றாண்டுகளுக்கும் மேலாக கோவில்பட்டி மண்ணில் கடலை மிட்டாய் தயாரிப்பு குடிசைத் தொழிலாக நடைபெற்று வருகிறது. கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு என்று தனித்துவமான சுவையும் மனமும் உண்டு.

    கோவில்பட்டி கடலைமிட்டாய் தரத்தையும் சுவையும் பாதுகாக்கும் பொருட்டு கடந்த 2014இல் கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் கோவில்பட்டி சார் ஆட்சியர் விஜய கார;த்திகேயன் ஐ.ஏ.எஸ். அவர;களை அணுகினர்.. அவரது வழிகாட்டுதலின் பேரிலும் முயற்சியின் காரணமாகவும் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கபட்டது. அதன் பிறகு பலகட்ட அலுவல் நடைமுறைகளை கடந்து இன்றைய தினம் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது..

    தமிழ்நாட்டில் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு மட்டுமே இந்த புவிசார் குறியீடு அங்கீகாரம் இன்று கிடைத்திருப்பது சிறப்புக்கும் சிறப்புக்கு உரியதாக உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 33 பொருட்களுக்கு புவிசர் குறியீடு கிடைத்துள்ள நிலையில் தற்போது 34வது ஆக கோவில்பட்டி கடலை மிட்டாய் புவிசார் குறியீடு அங்கீகாரத்தை பெற்றிருக்கிறது.. 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad