Header Ads

  • சற்று முன்

    ஆவடி அருகே வெளி மாநிலத்தை சார்ந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கினர்.


    ஆவடி அருகே வெளி மாநிலத்தை சார்ந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு ராயல் என்பீல்ட் மற்றும் அட்ஸ்வா அறக்கட்டளை நிறுவனம்   இணைந்து அத்தியாவசிய பொருட்கள் வழங்கினர்.

    உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரானா வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசு விதித்துள்ள ஊரடங்கு காரணத்தால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமலும் வேலையின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆவடி அடுத்த எஸ்.எம். நகர் பகுதியில் காவலர்களுக்கான குடியிருப்பு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்பொழுது அவர்கள் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவிப்பதை அறிந்த ராயல் என்ஃபீல்ட் நிறுவனமும் மற்றும் அட்ஸ்வா அறக்கட்டளை இணைந்து ஆவடி தனி வட்டாட்சியர் கிருபா உஷா தலைமையில் மற்றும் ஆவடி காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்திஅவர்கள் முன்னிலையில் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு அரிசி,பருப்பு,சமையல் எண்ணெய்,உளுந்து,புளி பூண்டு,மிளகு சீரகம் மற்றும் காய்கறிகள் வழங்கினார். இந்த அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்வில் திருமுல்லைவாயல் தலைமை காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் மற்றும் குற்றப்பிரிவு தலைமை ஆய்வாளர் ராமசாமி மற்றும் உதவி ஆய்வாளர் சீதாலட்சுமி மற்றும் அட்ஸ்வா அறக்கட்டளை எஸ் ஏ செல்லதுரை எம் டி எஸ் பால்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad