கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்
கோவில்பட்டியில் இந்திய மருத்துவ சங்க கிளை சார் பில் தூய்மைப் பணியாளருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர். கடம்பூர் ; ராஜூ கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் வானரமுட்டி, கழுகுமலை, செட்டிகுறிச்சி, கயத்தாறு, கடம்பூர் ஆகிய இடங்களில் தூய்மைப் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்.கள், மாற்றுத்திறனாளிகள்,
அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள் ஆகியோருக்கு அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் வழங்கினார். .
நிகழ்ச்சிகளில் கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர்கள் பாஸ்கரன், மணிகண்டன், வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் , மோட்டார் வாகன ஆய்வாளர்; நாகூர் கனி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சசிகுமார்; நகராட்சி ஆணையாளர்; ராஜாராம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யா, மாவட்டஊராட்சி குழு உறுப்பினர் பிரியா குருராஜ், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்.கஸ்தூரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை