Header Ads

  • சற்று முன்

    கோயம்பேடு சந்தை மற்ற நடவடிக்கை வியாபாரிகள் எதிர்ப்பு


    சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு சந்தையை தற்காலிகமாக வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய ஆலோசனை நடந்தது. ஆனால் வியாபாரிகள் எதிர்ப்பால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை., சந்தையை இடமாற்றம் செய்ய முடிவு? வியாபாரிகள் எதிர்ப்பு.. 

    அத்துடன் வெளியிலிருந்து காய்கறி வாங்க வரும் வணிகர்கள், கோயம்பேடு சந்தையை நம்பி பிற வணிகம் செய்வோர் என சுமார் ஒரு லட்சம் பேர் தினமும் காய்கறி வணிகம் செய்கிறார்கள். இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கி விற்பனை செய்து வரும் வணிகர் ஒருவர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்து அவரது குடும்பத்தினர் 6 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் பரவி உள்ளது. அத்துடன் கோயம்பேடு சந்தையில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சனிக்கிழமை அன்று முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் தனிமனித இடைவெளி இன்றி கோயம்பேடு சந்தையில் குவிந்து காய்கறிகளை வாங்கி குவித்தனர். இதனால் பலருக்கும் கொரோனா பரவுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.

    இந்நிலையில் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டதாலும் கொரோனா பரவியதாலும், கோயம்பேடு சந்தையை தற்காலிகமாக இடமாற்றம் செய்வது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தற்காலிகமாக கேளம்பாக்கம் மற்றும் மாதவரம் பகுதிக்கு கோயம்பேடு சந்தை மூன்றாக பிரித்து வேறு வேறு அமைக்கவும் ஆலோசனை நடந்தது. ஆனால் வியாபாரிகள் கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் விஸ்வநாதன் அவர்களிடம் பேசும் போது, மேலும் 4 பேருக்கு கொரோனா பரவி நிலையில் கோயம்பேடு சந்தையை உடனே மூட வேண்டியது வரும் என்றார். இதற்கிடையில் பேச்சவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் நாளை முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.

    சென்னையில் மக்கள் கோயம்பேடு சந்தைக்குச் செல்வதைத் தவிர்த்து, அந்தந்தப் பகுதிகளுக்கு வரும் நடமாடும் கடைகளிலும், ஆன்லைனிலும் காய்கறிகளை வாங்குமாறு மாநகராட்சி அறிவுறுத்தி வருகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad