Header Ads

  • சற்று முன்

    வந்தவாசி நகர,ஒன்றிய பகுதிகளில் ஒருங்கிணைந்த தூய்மைப்பணி-கனரக வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிப்பு-மாவட்ட ஆட்சியர் கந்தசாமி துவக்கி வைத்தார்


    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஒருங்கிணைந்த தூய்மை மற்றும் சுகாதார பணிகளை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் துவக்கி வைத்தார். வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 16 பேர் கொரோனோ தொற்று பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுதவிர வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்த 40 க்கும் மேற்பட்டோர் அவர்களது இருப்பிடத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். இதையொட்டி வந்தவாசி நகரப்பகுதி மற்றும் ஒன்றியத்தை சேர்ந்த 61 ஊராட்சிகளிலும் ஒருங்கிணைந்த  தூய்மைப் பணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

     வந்தவாசி நகரில் 10 டிராக்டர்கள் மூலம் அதிஅடர்த்தி இரசாயன கிருமிநாசினி ,அனைத்து பகுதிகளிலும் தெளிக்கும் பணி துவங்கப்பட்டது. இதே  போல்  61 ஊராட்சிகளிலும் 19 பேருந்துகளில் தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர்கள்,கிருமி நாசினி இயந்திரம் இயக்குபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.

    செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனோ தொற்று டன் ஒருவர் மட்டுமே அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாவட்டமெங்கும் 805 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு    கண்காணிப்பில் உள்ளனர். கிருமிநாசினி பற்றாக்குறை இருந்தபோதும் படிப்படியாக அது சரி செய்யப்பட்டு வருகிறது தவிர,மாவட்டம் முழுவதும் காவல்துறை வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் மருத்துவத்துறையினர் தொடர்ந்து முழுவீச்சில் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
    பேட்டி:
    K.S.கந்தசாமி, மாவட்ட ஆட்சியர், திருவண்ணாமலை.  திட்ட அலுவலர் ஜெயசுதா வருவாய் கோட்டாட்சியர் விமலா  வட்டாட்சியர் நரேந்திரன் DSP தங்கராமன் மருத்துவர்கள்  பணிமனை மேலாளர் வட்டார வளர்ச்சி அலுவலர் துப்புரவு பணியாளர்கள் உடன் இருந்தனர் .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad