வந்தவாசியில் 144 தடையை மீறி பள்ளிவாசலில் தொழுகை நடத்திய இஸலாமியர்களை அப்புறபடுத்திய காவல் துறையினர்
வந்தவாசி கோட்டை பள்ளிவாசலில் 144 தடை உத்தரவை மீறி தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை வெளியேற்றிய வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர்.
வந்தவாசி கோட்டைப் பகுதியில் மஸ்ஜிதே முகம்மதியா பள்ளிவாசல் உள்ளது, ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் வழக்கமாக ஐந்து வேளை தொழுகைகள் நடைபெறாத நிலையில், வெள்ளிக்கிழமை ஆகிய இன்று நடைபெற்ற சிறப்பு தொழுகையில் 100 க்கும் மேற்பட்ட இசுலாமியர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த வட்டாட்சியர் நரேந்திரன் மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளர் தங்கராமன் விரைந்து வந்து தொழுகையில் ஈடுபட்டவர்களை வெளியேற்றினர். 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் இசுலாமியர்கள் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டதும், அவர்களை காவல்துறையினர் வெளியேற்றிய தாலும் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் வீடியோ காட்சி nms today youtube ல் காணலாம்
கருத்துகள் இல்லை