அமைச்சர் கடம்பூர் ராஜு தனது சொந்த செலவில் 500க்கு மேற்பட்டோருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள வாடகை கார், வேன், சுமை வாகனம் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள், பந்தல் அமைப்பு, அலங்கார பணி மற்றும் ஒலி ஒளி அமைப்பு, சமையல் தொழிலாளர்கள் 530 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது சொந்த செலவில் அவர்களுக்கு அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் தொகுப்பை வழங்கினார்.
இதே போல் வணிக வைசிய நடுநிலைப்பள்ளியில், பள்ளி நிர்வாகம் மற்றும் சங்கம் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் விஜயா, வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் நாகூர் கனி, நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜன், நகர அதிமுக செயலாளர் விஜய பாண்டியன்,பள்ளி செயலாளர் வெங்கடேஷ், சங்க செயலாளர் பழனி குமார்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை