திருவாடானையில் தீயணைப்பு வாகனம் மூலம் நகர் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது
திருவாடானையில் கொரனோ வைரஸ் அச்சத்தை அடுத்து தீயணைப்பு வாகனம் மூலம் நகர் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கபடுகிறது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் மக்கள் அதிகமாக கூட கூடிய பேருந்து நிலையங்கள் அரசு அலுவலகங்கள் மற்றும் கோவில்கள் போன்ற இடங்களில் கொரனோ வைரஸ் பரவல் அச்சத்தை அடுத்து திருவாடனை தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையில் வந்த தீயணைப்பு மீட்பு வீரர்கள் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மற்றும் பொதுமக்கள் சார்பில் வழங்கப்பட்ட கிருமிநாசினி கலவையை தீயணைப்பு வாகனத்திற்குள் ஊற்றி கலந்து கோவில், பேருந்து நிலையம் அரசு அலுவலகங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூட கூடிய இடங்கள் ஆகியவற்றில் நகர் முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர் உடன் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜகோபால் திருவாடானை ஊராட்சி மன்ற தலைவர் இலக்கியா, துணைத்தலைவர் மகாலிங்கம் மற்றும் பலர் உடன் இருந்தனர்
கருத்துகள் இல்லை