Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி நகராட்சி சார்பில் அனைத்து சாலைகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.


    தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்த நிலையில் கோவில்பட்டியில் அனைத்து சாலைகளிலும் நகராட்சி சார்பில் ஊழியர்கள்  கிருமிநாசினி தெளிப்பு - மார்கெட்டிற்குள் வாகனங்கள் அனுமதி மறுப்பு - உணவின்றி ஆதரவற்றவர்களுக்கு நகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டது.

    தமிழகம் முழுவதும் கரோனா காரணமாக 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அத்தியாவசியமான பொருட்கள் விநியோகம் செய்யும் கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது. பொதுமக்கள் அதீக கூட்டமாக மார்கெட் பகுதிக்கு வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர். மார்க்கெட் பகுதியில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் உள்ளே அனுமதிக்காமல் கூட்ட நெரிசலை போலீசார் கட்டுப்படுத்தினர் 

    மேலும் சாலையின் ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்த பின்னரே வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர் மேலும் முக கவசம் அணிந்து செல்பவர்கள்; மட்டுமே காய்கறிகளை வாங்குவதற்கு மார்க்கெட்டில் அனுமதிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும கோவில்பட்டி நகர் முழுவதும் உள்ள சாலைகளில் நகராட்சி சார்பில் ஊழியர்கள் நகராட்சி வாகனத்தில் கிருமி நாசினி தெளித்தனர். நகரில் உணவின்றி ஆதரவற்று இருக்கும் 50க்கும் மேற்ப்பட்டோருக்கு நகராட்சி சார்பில் ஊழியர்கள் மூன்று வேலையும் உணவு வழங்கினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad