திருவாடானையில் கொரனோ வைரஸ் எதிரொலியாக ஆட்டுச்சந்தை நடைபெறவில்லை
திருவாடானையில் கொரனோ வைரஸ் எதிரொலியாக பல லட்சம் பண பரிவர்த்தனை நடக்கும் ஆட்டுச்சந்தை நடைபெறவில்லை
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் திங்கட்கிழமை காலை ஆட்டு சந்தையும் அதனை தொடர்ந்து காய்கறி சந்தை நடைபெறுவது வழக்கம் இதில் ஆட்டுச்சந்தை மிகவும் விமர்சையாக நடைபெறும். இந்த சந்தைக்கு தமிழகம் முழுவதில் இருந்து ஆடுகளும் அதை வாங்க விற்க வியாபாரிகள் வருவதன் மூலம் பல லட்ச ரூபாய் பரிவர்த்தனையும் பல நூறு ஆடுகள் விற்பனையும் நடைபெறும். அதனைத்தொடர்ந்து காய்கறி சந்தை மாலை வரை நடைபெறும். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து காய்கறிகள் வாங்கி செல்வது வழக்கம். தற்போது கொரனோ வைரஸ் அச்சத்தை அடுத்து இந்த வார சந்தை தற்காலிகமாக அடைக்கப்பட்டது' இதனால் வியாபாரிகள், பொது மக்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பினர்.
கருத்துகள் இல்லை