Header Ads

  • சற்று முன்

    கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 500 கோடி ரூ ஒதுக்கீடு! முதல்வர் அறிவிப்பு


    தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அரசு முழுவீச்சில் செயல்படுத்திவருகிறது. இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு அரசு இன்று காலை 5 மணி வரை நீட்டித்தது.
    மேலும் நாடு முழுவதும் 80 மாவட்டங்கள் தொடர்ந்து மார்ச் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதில் தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் அடக்கம். இந்நிலையில் இன்று காலை மூன்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.
    சட்டமன்றக் கூட்டத் தொடரை கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்ததோடு கூட்டத் தொடர் முழுவதையும் திமுக, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் புறக்கணித்தன.
    தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!
    இந்நிலையில் இன்று சபாநாயகர் தலைமையில் மீண்டும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கூட்டத் தொடரை நாளையுடன் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    மேலும் சட்டமன்றத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்கள் ஊரடங்குக்கு ஆதரவளித்த பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
    மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக முன்னெடுத்துவருவதாகவும் அதற்காக கூடுதலாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
    கொரோனா வைரஸ்: லாக்-டவுன் ஆகும் சர்வதேச நகரங்கள்!
    அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யும் கடைகள் தொடர்ந்து இயங்குவதில் தடையில்லை என முதல்வர் தெரிவித்துள்ளார். மளிகைக் கடைகள், பால் விற்பனை கடைகள் போன்ற இடங்களில் அதிக கூட்டம் இல்லாமல் காவல் துறையினர் பார்த்துக்கொள்ள வேண்டும், வருவாய்த் துறை அதிகாரிகள் அந்தப் பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad