Header Ads

  • சற்று முன்

    ஒரு நாள் கூத்து கோரனோவை ஒழித்திட முடியுமா


    நேற்று கோரனோ தொற்று நோய் பரவுவதை தடுக்க ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு மத்திய அரசின் உத்தரவு பேரில் மாநில அரசு அமுல்படுத்தியது. ஆனால் இன்று காலை முதல் வழக்கம் போல் சென்னை இயல்பு நிலைக்கு மாறியதாக அனைத்து ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த மாதம் 31ஆம் தேதி வரை கல்லுரிகள் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து இயக்கப்பட்டது. 

    ஐ.டி . நிறுவனங்கள் ஊழியர்கள் வீட்டில்  இருந்தவாறே பணி செய்ய விடுப்பு வழங்கிய நிலையில் வெளியூர்களுக்கு பேருந்து இயக்கத்தால் மீண்டும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வழக்கம் போல் பொது மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல கூட்டம் அலைமோதுகிறது. எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா ? மேலும் மத்திய அரசு சென்னை ஈரோடு , காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தொடர சொன்ன நிலையில் சென்னை கடைபிடிக்காது ஏன் ? புறநகர் பேருந்து இயக்கத்தால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க தவறியது ஏனோ என்று பொது மக்கள் ஆதங்கம் படுகின்றனர். .கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக பள்ளி கல்லூரிகள் மஹால்கள் வணிக வளாகங்கள் மூடிய நிலையில் வெளியூர் செல்ல பேருந்து இயக்காமல் இருந்திருக்கலாம் என பொது மக்கள் கேட்கின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad