• சற்று முன்

    கொரனோ தொற்றால் தமிழகத்தில் முதல் உயிர் பலி


    மதுரையை சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க நபர் கடந்த சில தினங்களுக்கு முன் தொடர் இருமல், காய்ச்சல் காரணமாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்ததில் கொரோன இருப்பது கண்டறியப்பட்டது.மேலும் ஏற்கனவே COPD நாள்பட்ட நுரையீரல் பாதிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் சிகிக்சை பலனிற்றி நேற்று இரவு காலமானார்.அவரது உடலை நள்ளிரவே அடக்கம் செய்யப்பட்டது.  அவர். வெளி நாட்டிற்கு செலத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது மனைவி, மக்கள் பரிசோதனை செய்து தனிமைபடுத்தப்பட்டுள்ளது இந்நிலையில்  அவருடன் நெருங்கிய நண்பர்கள் சுமார் 60 பேரை கண்டறிந்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுவருகிற்து. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவுக்கு முதலாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று அதிகாலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனாவுக்காக மதுரையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றார்.மேலும், கொரோனாவால் உயிரிழந்தவர் வெளிநாடு, வெளிமாநிலங்களுக்குச் செல்லாதவர் என்றும் கடுமையான நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்தால் அவர் உயிரிழந்தார் என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனாவால் தமிழகத்தில் ஏற்பட்ட முதலாவது உயிரிழப்பு இது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad