Header Ads

  • சற்று முன்

    கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 577; மகா., கேரளாவில் 100ஐ தாண்டியது


    கொரோனாவாடெல்லி: கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 577 ஆக அதிகரித்துள்ளது. மிக அதிகபட்சமாக கேரளாவில் 109 பேரும் மகாராஷ்டிராவில் 107 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    உலக நாடுகளில் மனித குலத்துக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து நிற்கிறது கொரோனா வைரஸ். இதுவரை உலகம் முழுவதும் 18,000க்கும் அதிகமான உயிர்களை பலி கொண்டிருக்கிறது கொரோனா 

    தொற்று நோய். பலி 11- பாதிப்பு 577 
    இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 577 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலங்களில் கேரளாவில்தான் மிக அதிகபட்சமாக 109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்ததாக மகாராஷ்டிராவில் 107 பேர் இத்தொற்று நோயால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    கர்நாடகாவில் 41 பேருக்கு பாதிப்பு 
    கர்நாடகா உள்ளிட்ட 7 மாநிலங்களில் 30க்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கர்நாடகாவில் 41; தெலுங்கானாவில் 39; குஜராத்தில் 36; உத்தரப்பிரதேசத்தில் 35; ராஜஸ்தானில் 32; டெல்லி மற்றும் ஹரியானாவில் தலா 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு- 18 பேருக்கு பாதிப்பு 
    பஞ்சாப் மாநிலத்தில் 29 பேரும் தமிழகத்தில் 18 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். லடாக்கில் 13; மத்திய பிரதேசத்தில் 12; மேற்கு வங்கத்தில் 9; ஆந்திராவில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சண்டிகரில் 7; காஷ்மீரில் 6; உத்தரகாண்ட்டில் 4; பீகாரில் 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

    வடகிழக்கில் ஒருவருக்கு பாதிப்பு 
    இமாச்சல பிரதேசத்தில் 3பேரும் ஒடிஷாவில் 2 பேரும் புதுவை, சத்தீஸ்கர், மணிப்பூரில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூரில் மட்டும்தான் கொரோனா தொற்று நோய் ஒருவரை பாதித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad