• சற்று முன்

    விருதுநகர் மாவட்டம் சிப்பிபாறையில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிர் இழப்பு


    பட்டாசு ஆலை வெடி விபத்து 8 பேர் பலியான விவகாரம் - ஆலையில் உரிமம் பெறாத பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளது - கோவில்பட்டியில் விருதுநகர் ஆட்சியர் தகவல்

    விருதுநகர் மாவட்டம் சிப்பிபாறையில் 8 பேர் உயரிழப்புக்கு காரணமான ராஜம்மாள் பட்டாசு ஆலையில் உரிமம் பெறாத பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தீ விபத்தில் காயமடைந்து தூத்துக்குடி மாவட்டம்   கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்த பின்பு  செய்தியாளர்களிடம் பேசிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர் மாவட்டம் சிப்பிபாறை ராஜம்மாள் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்து தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மருத்துவமனை உறைவிட மருத்துவர் பூவேஸ்வரியிடம் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, சிப்பிப்பாறை ராஜம்மாள் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்த 4 தொழிலாளர்கள் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை மற்றும் சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்ட தொழிலாளர்கள் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற விபத்துகள் வெயில் காலங்களில் அதிகமாக நடைபெறும். அதுவும் பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களும் அதன் உரிமையாளர்களும் போதுமான பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து எதிர்வரும் காலங்களில் உயிர்ச் சேதங்கள் எதிர்வரும் காலங்களில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 
    மேலும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்துக்கு தகுந்தார்போல்  பட்டாசுகளை தயார் செய்ய வேண்டும். தேவையில்லாமல் அவர்களுக்கு உரிமம் இல்லாத பட்டாசுகளை தயாரிக்கும் விஷப் பரிட்சையில் இறங்க வேண்டாம். அவ்வாறு செய்வது தெரிய வந்தால் அவர்களது உரிமம் ரத்து செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

    இன்றைக்கு விபத்து நடந்த பட்டாசு ஆலையில், பட்டாசு தயாரிக்க உரிமம் பெற்றுள்ளனர். ஆனால், பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்க அனுமதி கிடையாது.ஒரு அறைக்கு ஐந்து பேர் என்ற முறையில் நான்கு அறைகள் உள்ளனர் சாதாரணமாக 20 முதல் 25 தொழிலாளர்கள் வேலை செய்வார்கள் வார இறுதி நாள் என்பதால் கூலி வாங்குவதற்காக அனைவரும் வந்துள்ளனர் இதைப்போன்ற வெயில் காலத்தில் வியர்வை துளி பட்டால் கூட பட்டாசு ஆலையில் உள்ள மருந்துகள் வெடிக்கின்றன. அதனால் தான் பாதுகாப்பு என்பது முக்கியம் என தெரிவிக்கிறோம். ஏற்கெனவே வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து பட்டாசு ஆலை உரிமையாளர்களின் வரவழைத்து ஆலைகளில் என்ன விதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கி இருந்தோம். அதன் பின்னரும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தேவையான உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு சார்பாக உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு பெற்றுத் தரப்படும். மேலும், பட்டாசு சம்மேளனத்தில் இருந்தும் நிதி உதவி வழங்கப்படும், என்றார் அவர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad