கோவில்பட்டியில் மின்சாரம் தாக்கி பிளம்பர் பலி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிந்தாமணி நகரைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன்(47). பிளம்பராக பணியாற்றி வந்த இவர் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வந்துள்ளார். இன்று காலையில் புதிய வீட்டு பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த மின் வயரில் மின் கசிவு ஏற்பட்டதில் தங்கப்பாண்டி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை