Header Ads

  • சற்று முன்

    சேலத்தில் 5 பேருக்கு கோரானா பாதிப்பு தமிழகத்தில் மொத்தம் 23 ஆக உயர்வு


    சென்னை: தமிழகத்தில், மேலும் புதிதாக ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்அறிவித்துள்ளார். இதன் மூலம், தமிழகத்தில் இந்த வைரஸ் பாதித்த எண்ணிக்கை என்பது தற்போது 23 ஆக உயர்ந்துள்ளது.

    மார்ச் 25-ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 2 லட்சத்து 9 ஆயிரத்து 276 விமான பயணிகளை சோதித்துப் பார்த்துள்ளோம். இதில் 15 ஆயிரத்து 492 பேர் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்கள். மருத்துவமனையில் இருப்பவர் எண்ணிக்கை 211. மொத்தம் 890 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. அதில் 757 பேருக்கு நெகட்டிவ் என வந்துள்ளது பாதிப்பு இருப்பதாக 23 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், ஒருவர், ஏற்கனவே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

    புதிதாக, தமிழகத்தில், 5 கொரோனா வைரஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அதில் நான்கு பேர் இந்தோனேசியாவை சேர்ந்த பிரஜைகள். மற்றொருவர், அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக இருந்தவர். அவர்கள் அனைவரும் சேலம் மருத்துவ கல்லூரி தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் கடந்த 22ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார். சேலம் சுற்றுவட்டாரத்தில் அந்த சுற்றுலா பயணிகள் எங்கெல்லாம் சுற்றுலா சென்றார்களோ அங்கெல்லாம் அவர்கள் பழகியவர்களிடமும் இந்த நோய் பரவி இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால் அதுகுறித்து கணக்கெடுக்கும் பணியை ஏற்கனவே சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது

    வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மூலமாகத்தான் அந்த டிராவல் கைடுக்கு கொரோனா பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேநேரம் சென்னையை சேர்ந்த ஒரு நோயாளிக்கு, சமூக பரவல் மூலமாக, வியாதி பரவியிருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் தங்களைத் தாங்களே தக்காத்துக்கொள்ள வேண்டும், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை மிகவும் தீவிரமாக வலியுறுத்தி வருகிறார்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad