Header Ads

  • சற்று முன்

    மாஸ்க் உள்ளிட்ட பொருள்களை அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.


    மாஸ்க் உள்ளிட்ட பொருள்களை அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.ஊடகத்துறையினருக்கு நிவாரணம் வழங்க அரசு பரிசீலனை- கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ பேட்டி

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில்  கரோனா சிறப்புச் சிகிச்சை வார்டு  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார்.இதுபோல் கோவில்பட்டி பகுதியில் மகளிர் சுய உதவி குழுக்கள் அமைத்துள்ள மாஸ்க் சோப் ஆயில் கிருமிநாசினி கிளீனர் உள்ளிட்ட  8 பொருட்களை விற்பனை  மையத்தை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்தார்.இதில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உடனிருந்தார்.

    பின்னர் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 600 குடும்பங்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன.ஊடகத்துறையினருக்கு நிவாரணம் வழங்க அரசு பரிசீலனை -

    கொரோனாவிற்கு மருத்துவத்தை விட தனிமைப்படுத்துதல் தான் சிறந்தது என்று நாடளுமன்றம், சட்டமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.மக்கள் சுய ஊரடங்கினை மக்கள் நல்லபடியாக கடைபிடித்தனர். மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் அர்ப்பணிப்புவுடன் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் நம்மை காக்கும் கடவுளாக பணியாற்றி வருகின்றனர். நாட்டையும் வீட்டையும் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் அர்ப்பணிப்புவுடன் பணியாற்றி வருகின்றனர்.அடி தட்டு மக்கள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் குடும்ப அட்டைக்கு 1000ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைவாக தான் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 600 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.மகளிர் குழுக்கள் மூலமாக மாஸ்க் உள்ளிட்ட பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    மாஸ்க் உள்ளிட்ட பொருள்களை அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
    அரசு எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் மக்களின் சுய கட்டுப்பாடு தான் முக்கியம்.மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.மக்கள் சுய ஊரடங்கினை கடைபிடித்தால் நல்லது என்று கை கூப்பி பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.நாம் நம்மையும் பாதுகாக்க வேண்டும், மற்றவர்களை பாதுகாக்க வேண்டும் என்று உணர்ந்தால் தான் கொரோனா இல்லை என்ற நிலையை உருவாக்க முடியும்.144 தடை உத்தரவினை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மகத்தான பணிகளை ஊடகத்துறையினர்  செய்து வருகின்றனர்.ஊடகத்துறையினருக்கு நிவாரண தொகை வழங்குவது தொடர்பாக  அரசு பரிசீலனை செய்யும் என்றும், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.கூறினார் .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad