• சற்று முன்

    கோவில்பட்டி உழவர் சந்தையில் விழுதுகள் விவசாய உற்பத்தியாளர்கள் சார்பில் பல்பொருள் அங்காடி திறப்பு


    கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் உழவர் சந்தையில் விழுதுகள் விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனம் என்ற பெயரில் பல விவசாயிகள் ஒருங்கிணைந்து விவசாயிகளிடமிருந்து விளை பொருள்களை நேரடியாக கொள்முதல் செய்து மாளிகை பொருள்கள் தயார் செய்து விற்பனை செய்யும் பொருட்டு பல்பொருள் அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. 

    புதிய பல்பொருள் அங்காடியை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம் துணை இயக்குநர் சாந்திராணி திறந்து வைத்து, விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த பல்பொருள் அங்காடியில் பருப்புவகைகள், எண்ணெணெய் வகைகள் உள்ளிட்டு வீட்டிற்கு தேவையான அனைத்து மாளிகை பொருள்களும் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாளிகை பொருள்கள் அனைத்தும் விவசாயிகளிடம் இருந்து நேரிடையாக பெறப்பட்ட விவசாய பொருள்களில் இருந்து தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடதக்கது. விழாவில், வேளாண் அலுவலர்கள் பாலமுருகன், .ராமச்சந்திரன், கண்ணன், மாலதி மற்றும் விழுதுகள் விவசாய உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad