கோவில்பட்டி அருகே அரசு பள்ளியில் உள்ள அறைக்கு தீ வைத்த மர்ம நபர்கள் - போலீசார் விசாரணை
கோவில்பட்டி அருகே ஆசூரில் கயத்தார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1 முதல் 5ம் வகுப்புகள் வரை உள்ளன. இப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் என இருவர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை தீடீரென பள்ளியில் இருக்கும் நூலக அறையில் இருந்து தீடீரென அதிகளவு புகை வருவதை கண்ட அருகில் இருந்த மக்கள், பள்ளி சத்துணவு அமைப்பாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அவர் விரைந்து வந்து பள்ளியை திறந்த பார்த்த போது நூலக அறையில் தீ பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை தொடர்ந்து கிராம மக்களின் உதவியுடன் தீயை அணைக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் நூலக அறையில் இருந்த சில ஆவணங்கள், புத்தகங்கள், செயல்முறை பயிற்சி கல்விக்கான அட்டைகள் , காலியான பிளாஸ்டிக் தண்ணீர் டேங் ஆகியவை சேதமடைந்துள்ளன. இது குறித்து பொது மக்கள் கயத்தார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து விசாரணை நடத்தினார். அறையில் மின் இணைப்பு எதுவும் இல்லை என்பதால் மர்ம நபர்கள் தீ வைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து கயத்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை