சிந்தலக்கரை பள்ளியில் கரோனாவைரஸ் விழிப்புணர்வு சுகாதார செயல் விளக்க பயிற்சி முகாம்
கோவில்பட்டி ரோட்டரிசங்கம் சார்பில் கரோனா வைரஸ் விழிப்புணர்வு சுகாதார செயல் விளக்க பயிற்சி முகாம் சிந்தலக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது
பள்ளி மாணவர்களுக்கு தன் சுத்தம் மற்றும் கைகளை சோப்பு போட்டு கழுவும் முறை குறித்து செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு நலமுடன் வாழ பத்துகட்டளைகள் மற்றும் கரோனா வைரஸ் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த மாணவர்களுக்கு சோப்பு, நகவெட்டி, டூத் பிரஷ், டூத் பேஸ்ட்,சீப்பு, உள்ளிட்ட சுகாதார பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. மாணவர்கள் தினசரி சுகாதாரதன் சுத்த பழக்க வழக்கங்களை கடைபிடிக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பயிற்சி முகாமிற்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ். முன்னாள் தலைவர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் செந்தில்குமரன் அனைவரையும் வரவேற்றார். ரோட்டரி சுகாதார பயிற்றுனர் முத்துமுருகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கரோனாவைரஸ் மற்றும் தன் சுத்த விழிப்புணர்வு சுகாதார செயல் விளக்க பயிற்சி அளித்தார். இதில் பள்ளி ஆசிரியர்கள் ஜெயபாரதி, ராஜ்குமார், செண்பகவள்ளி, உள்பட மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஆசிரியை ராஜேஸ்வரிநன்றி கூறினார்
செய்தியாளர் : சிவராமலிங்கம்
கருத்துகள் இல்லை